கள்ளக்குறிச்சி; நிறைமதி ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் பாசன வாய்க்கால் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் உள்ள ஏரிக்கு, நீர் வரத்து வாய்க்கால் இல்லாததால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. நீலமங்களம் ஏரியில் உபரிநீர் வெளியேறும் பகுதியில் இருந்து, நிறைமதி ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய் அமைத்து தரக்கோரி நிறைமதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த நிறைமதி கிராம மக்கள் நேற்று மதியம் 12:30 மணியளவில் நீலமங்களம் கூட்ரோடு - கூத்தக்குடி சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தாசில்தார் பிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோதினி, இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வி.ஏ.ஓ.,க்கள் திவ்யபாரதி, எழில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், 1:00 மணியளவில் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE