சிவகாசிஇயந்திரமயமான இன்றைய நவீன யுகத்திலும் ஈர மனதுடன் பலர் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சரியான நபருக்கு சரியான உதவியை வழங்க முடியும். சமூகப் பணி என்பது தனி நபராலோ ,ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ, சமூக நலன் கருதி செய்யப்படும் சேவை. அந்த வகையில் 2019 ல் தமிழன் ஜெகன் என்பவர் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பாமர மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்டு தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் கொரோனா தொற்று காலத்தில் சிவகாசி பகுதியில் இல்லாதவர் களுக்கு அரிசி ,காய்கறிகள், புடவைகள் என உதவிகள் வழங்கினர். கொரோனா காலத்தில் உழைத்த போலீசார், துாய்மைப் பணியாளர்களையும் கவுரவித்தனர். வாழ்வாதாரம் இன்றி ரோட்டோரத்தில் வசித்த அனைவருக்கும் தொடர்ந்து 5 மாதங்கள் உணவு, பிஸ்கட் வழங்கினர். இதை தமிழகம் முழுவதும் செய்துள்ளனர்.
சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். இதோடு பொது மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரிடையாக சென்றும் தீர்த்து வைக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE