புதுச்சேரி: பி.ஆர்.டி.சி. யை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசுக்கு சொந்தமான புதுச்சேரி சாலைபோக்கு வரத்து கழகத்தில் (பி.ஆர். டி.சி.,) 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. 1020 பேர் பணி புரிகின்றனர்.பி.ஆர்.டி.சி., மூலம் திருப்பதி, சென்னை, பெங்களூர், குமுளி, நாகர்கோவில், மாகி, வேளாங்கண்ணி, காரைக்கால், கோவை ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் விரைவு பஸ்கள் மட்டும், லாபத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், 55 விரைவு பஸ் வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்தது. தனியார் மூலம் இயக்கி, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் சிறிய தொகையை பி.ஆர்.டி.சி.,க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு உறுதுணையாக இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான், கம்பெனி செயலர் கிேஷார்குமார் ஆகியோரை கண்டித்து, பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது.பி.ஆர்.டி.சி. நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலர் வேலைய்யன் தலைமை தாங்கினார்.
கவுரவ தலைவர் பாலமோகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்காலில், அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெயசிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன், பி.ஆர்.டி.சி., ஊழியர் சங்க பொறுப்பாளர் சுப்புராஜ் ஆகியோர், கலெக்டர் அரஜூன் சர்மாவிடம் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE