பொன்னேரி : பழவேற்காடில், வீடுகளை காலி செய்யும்படி கூறியதாக, வனத்துறையினரை கண்டித்து, பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜரத்தினம் நகர், கள்ளுமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும், பழங்குடிமக்கள், ஏரியில், துாண்டில் மூலம் மீன்பிடித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். அங்குள்ள வனத்துறை அலுவலகத்தினை ஒட்டி இவர்களது குடியிருப்புகள் உள்ளன.இவர்களது வீடுகளை காலி செய்யும்படி அவ்வப்போது வனத்துறை அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.இதை கண்டித்து, நேற்று, மேற்கண்ட பழங்குடி இன மக்கள் வனத்துறை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, வனத் துறையினருக்கு தாங்கள் இங்கு வசிப்பது இடையூறாக இருக்கிறது.காலம், காலமாக வாழ்ந்து வரும் இடத்தில் இருந்து தங்களை வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தினை, வெளி நபர்கள் ஆக்கிரமித்து பட்டா பெற்று உள்ளனர்.அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தினை தொடர்ந்தனர்.தகவல் அறிந்த பொன்னேரி வருவாய்த் துறை மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE