புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரியில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத் தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று கடந்த 2 மாதங்களாக குறைய துவங்கியது. தற்போது பனி காலம் துவக்கம், கொரோனா மீதான அச்சம் குறைந்ததால் முக கவசம் அணிவதை பலரும் தவிர்த்து வருகின்றனர். இதனால், புதுச்சேரியில் கொரோனா பரவல் மெல்ல அதிகாரிக்க துவங்கியுள்ளது.நேற்று முன்தினம் 3126 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி 20, காரைக்காலில் 7, மாகியில் 18 பேர் என புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37,715 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 201 பேரும், லேசான அறிகுறிகளுடன் 138 பேர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று ஒரே நாளில் 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 36,752 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த முதலியார்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று உயிரிழப்பு 624 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 4,50,501 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 4,08,468 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE