புதுச்சேரி; புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ., கட்சி தனது பிரசாரத்தை சனி மூலையான கனக செட்டிகுளத்தில் நேற்று துவங்கியது.பா.ஜ.,மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.பிரசாரத்தை தொடங்கி வைத்து மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:மத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக மோடி தலைமையில் பா.ஜ., அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. வட மாநிலங்கள் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் என பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., அரசு நடைபெற்று வருகிறது.அதேபோல் புதுச்சேரியிலும் பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும்.முதல்வர் நாராயணசாமி தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பொதுத்துறை நிறுவனங்களான ஏ.எப்.டி., மில், சுதேசி மில், பாரதி மில் உள்ளிட்டவற்றை காங்.,அரசு மூடிவிட்டது. விவசாயிகளுக்கு விளைபொருள்களுக்கான உரிய விலையை கொடுப்பதுதான் பா.ஜ.,வின் நோக்கம் அதற்காகத்தான் சட்டங்களை அமல்படுத்தி வருகிறது ஆனால் எதிர்க் கட்சியினர் திட்டமிட்டு தவறான தகவலை பரப்பி வருகின்றனர். எதிர்வரும் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். 25ம்தேதி வரை தொடர்ந்து ஐந்து தொகுதிகளில் பிரசாரம் நடக்கின்றது.மாநில செயலர்கள் அகிலன், ரத்தினவேல், லதா, மாநில துணைத் தலைவர் சாய்சரவணன், மாநில பொருளாதார பிரிவு தலைவி பிரபா தேவி, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம் ஊடகப் பொறுப்பாளர் குரு சங்கரன் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE