அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி

Added : டிச 19, 2020
Share
Advertisement
பரமக்குடி : மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி வரும் சூழல் உள்ளது. வேளாண் சட்டங்கள் வந்த பின் தான் இடைத்தரகர்களிடம்இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது என ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார். பரமக்குடியில் இந்து மக்கள் கட்சி கொடியேற்றுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பழனி பாண்டியன் தலைமை

பரமக்குடி : மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி வரும் சூழல் உள்ளது. வேளாண் சட்டங்கள் வந்த பின் தான் இடைத்தரகர்களிடம்இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது என ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

பரமக்குடியில் இந்து மக்கள் கட்சி கொடியேற்றுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பழனி பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் தனஜெயன் முன்னிலைவகித்தார். பரமக்குடி சட்ட மன்ற தொகுதி தலைவர் முரசொலிமாறன் வரவேற்றார். ஹிந்து மக்கள்கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் கொடியேற்றி வைத்தார். அப்போது கூறியதாவது:தென்மாவட்டத்தில் ஆன்மிக அரசியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும்.60 ஆண்டு திராவிட ஆட்சியில் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எந்த விதமான வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. ரஜினி அதனை முன்னெடுத்து செல்வார். மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி வரும் சூழல் உள்ளது. வேளாண் சட்டங்கள் வந்த பின் தான் இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. முதல்வராக வரவேண்டும் என ரஜினிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X