புதுச்சேரி; புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.புதுச்சேரியில் பிளாஸ்டிக் பை (கேரி பேக்), பிளாஸ்டிக் டீ கப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடை விதித்து அரசாணை வெளியானது.தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்பு துறைகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன்பின்பு, பிளாஸ்டிக் பை, டீ கப் பயன்பாடு பெரிதும் குறைந்தது.சமீப காலமாக புதுச்சேரியில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரிக்க துவங்கியதாக புகார் எழுந்தது.அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளர் ரமேஷ், வருவாய்த்துறை துணை தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.அதில், வெள்ளாழர் வீதி, பாரதி வீதி சந்திப்பு அருகில் உள்ள கடைக்கு சொந்தமான குடோனில், தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் டன் கணக்கில் குவித்து வைத்திருப்பதை கண்டுபிடித்து, குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE