புதுச்சேரி; புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரண் டில்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சகம் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள் ளது. இதில், டில்லியில் உள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகையின் உள்ளிருப்பு ஆணையரான சரண், டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக டில்லி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நெடுஞ்செழியன் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை மத்திய உள்துறை சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE