பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களுக்கு 'நோ கொரோனா'

Added : டிச 19, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கல்லுாரிமாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும்பாதிப்பு இல்லை என சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் மார்ச் 26 முதல் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கல்லுாரிமாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும்பாதிப்பு இல்லை என சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் மார்ச் 26 முதல் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.இதனையடுத்து சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி டிச.,7 முதல் கல்லுாரிகளில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடக்கிறது. மாணவர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 15 கல்லுாரிகளில் 286 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், 'மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும் தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை பின்பற்ற வேண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என கல்லுாரி நிர்வாகத்தினரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X