சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.19.70 லட்சம் மோசடி 'மாஜி' தலைமை ஆசிரியர் கைது

Added : டிச 19, 2020
Share
Advertisement
விழுப்புரம்:அரசு வேலை வாங்கித்தருவதாக, 19.70 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் குருதேவன், 70; விழுப்புரம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பணிபுரிந்த போது, திண்டிவனம், மன்னார்சாமி கோவிலை சேர்ந்த பாலகுகன், 49;

விழுப்புரம்:அரசு வேலை வாங்கித்தருவதாக, 19.70 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் குருதேவன், 70; விழுப்புரம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பணிபுரிந்த போது, திண்டிவனம், மன்னார்சாமி கோவிலை சேர்ந்த பாலகுகன், 49; பழக்கமானார்.இவரிடம் அரசு துறைகளில் நிறைய பணியிடம் காலியாக உள்ளது. தனக்குத் தெரிந்த அமைச்சர் ஒருவர், காலி பணியிடங்களை நிரப்புகிறார்.

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள், அவர்களுக்கும் வேலை வாங்கிக் கொள்ளலாம் என, குருதேவன் தெரிவித்தார்.

பாலகுகன் தன் மனைவிக்கு வேலை வேண்டி, 3 லட்சம் ரூபாய், உறவினர்கள், நண்பர்களிடம் என, மொத்தம் 19.70 லட்சம் ரூபாய், 2017ல் வாங்கி கொடுத்து உள்ளார்.நீண்ட நாட்களாகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் பல முறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை.இது குறித்து, பாலகுகன் அளித்த புகார்படி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குருதேவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X