சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4.20 லட்சம் மோசடி 3 வாலிபர்கள் கைது

Added : டிச 19, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வாணியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிதரன், 51; விவசாயி. இவரிடம் மார்ச், 21ல் மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், உங்கள் வீட்டின் அருகே மொபைல் போன் டவர் அமைக்க உள்ளோம்.அதற்கு உங்களது நிலத்தின் ஆவணம் குறித்த நகல் மற்றும், 4.20 லட்சம் ரூபாய் தரவேண்டும். டவர் அமைத்தவுடன் பணம் திரும்பக் கொடுத்து விடுவோம்.

உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வாணியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிதரன், 51; விவசாயி.

இவரிடம் மார்ச், 21ல் மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், உங்கள் வீட்டின் அருகே மொபைல் போன் டவர் அமைக்க உள்ளோம்.அதற்கு உங்களது நிலத்தின் ஆவணம் குறித்த நகல் மற்றும், 4.20 லட்சம் ரூபாய் தரவேண்டும். டவர் அமைத்தவுடன் பணம் திரும்பக் கொடுத்து விடுவோம். பின்,மாதம் தோறும் வாடகையாக, 10 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என கூறியுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த துளசிதரன், மொபைல் போனில் பேசிய நபரை பார்க்காமலேயே அவர் கொடுத்த 'இ - மெயிலில்', நிலத்தின் ஆவண நகல் மற்றும் வங்கிக் கணக்கில், ஏழு தவணைகளாக, 4.20 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.பின், அந்த நபரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.பல முறை முயன்றும் கிடைக்கவில்லை.

இது குறித்து, துளசிதரன் திருநாவலுார் போலீசில் செப்., 23ல் புகார் அளித்தார்.சென்னை, வண்ணாரப்பேட்டை ரோஹித்கரன், 31 திருவெற்றியூர் அரவிந்த்சாமி, 28 கோயம்பேடு பார்த்தசாரதி, 25 ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X