பொது செய்தி

தமிழ்நாடு

'அன்பே வா'

Added : டிச 19, 2020
Share
Advertisement
இது, 1966ம் ஆண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, ஒரு பெரிய அலையை ஏற்படுத்திய படம் வெளியானது. தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்ட படமான, எம்.ஜி.ஆர்., நடித்த 'அன்பே வா'.அந்த காலத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமான 'அன்பே வா', எம்.ஜி.ஆர்., ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் பல வேடங்களில் பல்வேறு படங்களில் நடித்த
 'அன்பே வா'

இது, 1966ம் ஆண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, ஒரு பெரிய அலையை ஏற்படுத்திய படம் வெளியானது. தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்ட படமான, எம்.ஜி.ஆர்., நடித்த 'அன்பே வா'.அந்த காலத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமான 'அன்பே வா', எம்.ஜி.ஆர்., ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் பல வேடங்களில் பல்வேறு படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., ஒரு பெரும் பணக்காரராகவும், தன்னை யார் என அடையாளப்படுத்தி கொள்ளாமல் அமைதியை தேடிச்செல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.படம் வெளியாகி, 54 ஆண்டுகளுக்கு பின்னரும், மூன்று தலைமுறையை கடந்தும், அன்பே வா இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் வெளியானது.
படத்தை திரையிட்ட, உஷா தியேட்டர் உரிமையாளர் ரவிக்குமார் கூறியதாவது:தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகர் எம்.ஜி.ஆர்.. என்பதை யாராலும் மறுக்க முடியாதது. இதே அரங்கில் பல முறை இந்த படம் திரையிடப்பட்டு, ரசிகர்களை களிப்படைய செய்துள்ளது.தற்போது டிஜிட்டல் வடிவில் வெளியாகி மேலும், அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. பலதரப்பு வயதினரும் இந்த படத்தை ஆவலுடன் பார்க்க வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X