திருப்பூர்:''திடீர் தேவை அதிகரிப்பு, சில நுாற்பாலை துறைக்கு தற்காலிக சிக் கலை ஏற்படுத்துகிறது'', என, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபுதாமோதரன் தெரிவித்துள்ளார்.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், திருப்பூர் சுற்றுப்பகுதி, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நுாற்பாலைகளிலிருந்து, ஒசைரி நுால் கொள்முதல் செய்கின்றன.
சில நாட்களாக, நுாற்பாலைகள், நுால் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் புகார் தெரிவிக்கின்றன.'ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, தட்டுப்பாடின்றி நுால் வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் (டாஸ்மா), கோவை சைமா, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்.,) உள்ளிட்ட நுாற்பாலை சங்கங்களுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது:சீரற்ற உற்பத்தி, தொழிலாளர் பற்றாக்குறை, கன்டெய்னர் தட்டுப்பாடு, திடீரென ஏற்படும் உற்பத்தி பாதிப்பு ஆகியவை ஆடை உற்பத்தி துறையினரின் மூலப்பொருள் கொள்முதலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மட்டுமல்லாமல் வங்கதேசம், வியட்நாம் போன்ற உலகளாவிய ஆடை உற்பத்தி துறையினர், நுால் மற்றும் துணியை, அன்றைய தேவையைவிட அதிகமாக கொள்முதல் செய்து, கூடுதலாக இருப்பு வைக்க துவங்கிவிட்டனர். இதனால், நுால் தேவை அதிகரித்துள்ளது. இது, தற்காலிகமானது தான்; விரைவில் இந்த நிலை மாறிவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE