மதுரை : “நாட்டுப்பற்றால் என்னால் முடிந்த பங்களிப்பை அளித்தேன்” என புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிக்கு நிதிஅளித்த மதுரை மாணவர் சாய் அக் ஷய் பிரணவ் தெரிவித்தார்.
பிரதமர் மோடி முயற்சியால் ரூ.971கோடி மதிப்பில் பிரமாண்டமான பார்லிமென்ட் கட்டுமான பணிக்கு பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் மதுரையில்டிச., 11ல் தனது பிறந்த நாளின்போது மாணவர் சாய் அக்சய் பிரணவ் தன் பங்களிப்பாக சேமிப்பு பணம்ரூ.1145க்கான காசோலையை பார்லிமென்ட் கட்டுமானத்திற்காக அனுப்பினார்.அவரை பாராட்டியுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா, ஆசீர்வதித்துஅப்பணத்தை மாணவருக்கே பிறந்த நாள் பரிசாக அனுப்ப முடிவு செய்துள்ளார்.நமது நிருபரிடம் சாய் அக் ஷய் பிரணவ் கூறியதாவது: சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறேன்.
கொரோனா காரணமாக மதுரை மாடக்குளம்வீட்டில் இருந்து ஆன்லைனில் கற்கிறேன். அப்பா பாலன் அப்பளம் தொழில் செய்கிறார். அம்மா நந்தினி மற்றும்தம்பி உள்ளனர்.பிறருக்கு உதவும் மனப்பான்மை பெற்றோருக்கு அதிகம்உள்ளது.'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி காவியாவை நேரில் சென்று பாராட்டி கவுரவித்தோம்.என்பள்ளி முதல்வர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் மாணவரிடையே நாட்டுப்பற்றை வளர்க்க அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். என் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அப்பாவிடம் கேட்டேன். அவர் ஆலோசனைபடி பார்லிமென்ட் கட்டுமான பணிக்காகசிறு தொகையை அனுப்பினேன். எனக்கு சபாநாயகரின் ஆசீர்வாதம் போதும். தயவு செய்து இச்சிறு தொகையை அவர் ஏற்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE