அவிநாசி:விளை நிலங்களில் உள்ள மண்ணில் நுண்ணுயிர்களை அதிகப்படுத்த, மூலிகை மருந்து தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:ஒரு மண்பானையில், ஒரு கிலோ வேப்பங்கொட்டை பவுடரை, 5 லி., தண்ணீரில், 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின், வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். எடுத்த சாறுடன், 3 லி., பசுங்கோமியம் சேர்க்க வேண்டும்.
இந்த கரைசலுடன், 2 லி., பசுந்தயிரை சேர்க்க வேண்டும். இக்கரைசலை, 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இதனை வடிகட்டியவுடன், அதிமதுரம் தூளையும், கடுக்காய் பொடியையும் சேர்க்க வேண்டும். இதில் இருந்து, துாய்மையான வேப்பங்கொட்டை மூலிகை தயிர் மிக்சர் சாறு, 8 லிட்டர் அளவு கிடைக்கும்.
இந்த கரைசலை 10 லி., தண்ணீருக்கு ஒரு லி., என்ற அளவில், முருங்கை மரம் மற்றும் காய்கறி பயிர்களுக்கு காலை, மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் அவற்றில் பூ பிடிப்பு ஏற்படும். பருவ காலத்தில், இவற்றை, பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிப்பதன் மூலம், பூ உதிராது. காய்கள் அதிகம் பிடிக்கும்.இக்கரைசல் மூலிகை மருந்தாக இருப்பதால், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக செய்யும். மண் வளம் பாதுகாக்கப்படும். மண்ணுக்கு, நுண்ணுயிர் சத்து அதிகரிக்கும். சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படும். பழங்களிலும் நோயை கட்டுப்படுத்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE