பொது செய்தி

தமிழ்நாடு

அவசரம் வேண்டாமே!ஜாப்ஒர்க்' நிறுவனங்கள், கட்டண உயர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும்

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருப்பூர்,:'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள், கட்டண உயர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என, 'டீமா' சங்கம் வலியுறுத்தியுள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை என, உற்பத்தி செலவினம் அதிகாரிப்பால், ஜாப்ஒர்க் நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.ஒசைரி நுால், எலாஸ்டிக், அட்டைப்பெட்டி, பாலிபேக் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற ஜாப்ஒர்க் நிறுவனங்களும்

திருப்பூர்,:'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள், கட்டண உயர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என, 'டீமா' சங்கம் வலியுறுத்தியுள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை என, உற்பத்தி செலவினம் அதிகாரிப்பால், ஜாப்ஒர்க் நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.ஒசைரி நுால், எலாஸ்டிக், அட்டைப்பெட்டி, பாலிபேக் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற ஜாப்ஒர்க் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த ஆலோசித்து வருகின்றன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:தற்போதைய தொழில் சூழல் கருதி, புதிய ஒப்பந்த பேச்சு துவக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்து கொண்டு தொழிற்சங்கங்கத்தினரும் அமைதி காத்து வருகின்றனர்.ஆனால், ஜாப்ஒர்க் நிறுவனங்களோ, எதையும் பொருட்படுத்தாமல், கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்தி வருகின்றன. உற்பத்தி செலவு அதிகரிப்பால், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஆடை விலையை உயர்த்தியுள்ளன.ஆனால், ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களால், ஆடை விலையை உயர்த்த முடிவதில்லை.
சர்வதேச ஆடை வர்த்தக சந்தையில், போட்டி மிக கடுமையாக உள்ளது. ஆடை விலையை உயர்த்தினால், வர்த்தகத்தை இழக்க நேரிடும்.எனவே, தொழில் சூழல் கருதி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள், கட்டண உயர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும்.அவசர முடிவு எடுக்க கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும். கட்டண உயர்வு வழங்கும் நிலையில், தற்போது ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X