திருப்பூர்:'ராபி' பருவத்தில், ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியம் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி கூட்டம், முத்தணம்பாளையத்தில் நடந்தது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, வேளாண் அலுவலர் அருண்குமார், பொங்கலுார் அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கதிரவன் உள்ளிட்டோர், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குறைந்த நீர் தேவை கொண்ட, கம்பு, ராகி சாகுபடியை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தானியங்களில் உள்ள, மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது குறித்தும் விவரிக்கப்பட்டது.தானியம் உற்பத்தியின் வாயிலாக, கால்நடைகளுக்கு சத்துமிகுந்த தீவனம் கிடைப்பது குறித்தும் புள்ளி விவரங்களுடன் விளக்கப்பட்டது.குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், பயறு வகை, தானியம், எண்ணெய்வித்து பயிர்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE