தமிழ்நாடு

எச்சரிக்கை! மதுரையில் மீண்டும் கூடுது கொரோனா... பரவலை குறைக்க தேவை விழிப்புணர்வு

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. 216ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 நாட்களில் 300ஐ தாண்டிவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே பரவலையும் பாதிப்பையும் குறைக்க முடியும்.சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. ஜூன், ஜூலையில் மிகவும் அதிகரித்தது. தினமும் 350 முதல் 450 வரை பாதிக்கப்பட்டனர்.
எச்சரிக்கை! மதுரையில் மீண்டும் கூடுது கொரோனா... பரவலை குறைக்க தேவை விழிப்புணர்வு

மதுரை : மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. 216ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 நாட்களில் 300ஐ தாண்டிவிட்டது.

மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே பரவலையும் பாதிப்பையும் குறைக்க முடியும்.சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. ஜூன், ஜூலையில் மிகவும் அதிகரித்தது. தினமும் 350 முதல் 450 வரை பாதிக்கப்பட்டனர். பரிசோதனை, படுக்கை, சிகிச்சை வசதிகளை அதிகரித்ததால் பாதிப்பு கட்டுப்பட துவங்கியது. மக்களும் சமூக இடைவெளி, மாஸ்க் விஷயத்தில் அதிக அக்கறை காட்டி ஒத்துழைப்பு கொடுத்தனர். தினசரி பாதிப்பு 200, 100 என சரிந்து, நவம்பரில் 30ஐ விடவும் குறைந்தது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மறுபுறம் அலட்சியம் அதிகரித்தது. வைரஸ் முற்றிலும் காணாமல் போய் விட்டதை போன்று நடந்துகொள்ள துவங்கினர். சமூக இடைவெளி காற்றில் பறந்தது. கடைகள், மார்க்கெட்களில் கூட்டம் அலைமோதுகிறது. விழாக்களில் நெரிசல் தாண்டவ மாடுகிறது. மாஸ்க் அணிவோர் 20 சதவீதத்திற்கும் குறைவாகிவிட்டது. அணியும் வெகுசிலரும் கழுத்தில் தொங்கவிட்டு செல்கின்றனர்.விழாக்களால் பாதிப்புகுறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளில் மாஸ்க் கலாசாரத்தை காணவில்லை. சமூக இடைவெளியின்றி பந்தியில் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். விளைவு, மாவட்டத்தில் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது.

தொடர்ந்து குறைந்து வந்த பாதிப்பு கடைசி 30 நாளில் சீராக உயர்ந்துள்ளது. நவம்பர் இறுதியில் தினசரி பாதிப்பு 26 ஆக இருந்தது. டிசம்பர் துவக்கத்தில் 27 ஆனது. இப்போது 32 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்கிறது. டிசம்பர் துவக்கத்தில் 200 முதல் 230 என்ற எண்ணிக்கைக்குள் இருந்தது. இப்போது 300ஐ கடந்துவிட்டது. நேற்று காலை நிலவரப்படி 314 பேர் சிகிச்சையில் இருந்தனர்.கடைசி 10 நாள் நிலவரம் மீண்டும் பதட்ட நெருப்பை பற்ற வைத்துள்ளது. மாஸ்க், சமூக இடைவெளியில் மக்கள் காட்டி வரும் அலட்சியம் மதுரையை 2வது அலையை நோக்கி மெல்ல அழைத்து செல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்னும் மெத்தனத்தை தொடர்ந்தால் 2வது அலையை எதிர்கொள்வதை தவிர மதுரை வாசிகளுக்கு வேறு வழியில்லை.மக்கள் கையில் தீர்வுமதுரையில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களில் வெளிமாவட்டத்தவர்களே அதிகம். 2ம் அலை வராமல் தடுப்பது மக்கள் கையில் தான் உள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை அனைவரும் கடைபிடித்து எச்சரிக்கையுடன் இருந்தால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.ஊரடங்கு தளர்வால் தொழிற்சாலை, மார்க்கெட், வணிக வளாகங்கள் வழக்கம் போல செயல்பட துவங்கியுள்ளன.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டும் மேம்படுகிறது. பொதுவாக, தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் 5 சதவீதம் பேர் பாதிக்கப் பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் சூழல் உருவாகும். தமிழகத்தை பொறுத்தவரை தினசரி 1.5 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.மதுரையில் 1-2 சதவீதமாக உள்ளது. மக்களின் அலட்சியப்போக்கு தொடர்ந்தால் பாதிப்பு விகிதம் அதிகரிக்கும். இது மீண்டும் ஊரடங்கை கொண்டு வந்து பொருளாதார வீழ்ச்சி, பசி, பஞ்சத்தை உருவாக்கிவிடும்.60 மாணவர்களுக்கு 'நெகட்டிவ்' விடுதியில் தங்கி மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் திருச்சி மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தற்போது சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 60 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் 60 பேருக்கு இன்று பரிசோதனை மேற் கொள்ளப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X