முதுகுளத்துார் : பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு: வேளாண் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர அரசு தயாராக இருப்பதாக பா.ஜ., எச்.ராஜா தெரிவித்தார்.
முதுகுளத்துாரில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள்கூட்டம் பா.ஜ., முன்னாள்தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில்நடந்தது. மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் சண்முகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற பொறுப்பாளர் ராம்குமார் வரவேற்றார்.சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது குறித்து விளக்கினர்.பின்னர் எச். ராஜா கூறியதாவது: வேளாண் சட்டத்தை திரும்ப பெற முடியாது பெரும்பான்மையுடன் நிறைவேறிய சட்டம்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள்யாரும் விவசாயிகள் இல்லை. விவசாயிகள் இவ்வளவு நாள் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். விவசாயிகளுக்கு நல்ல விலையும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்று புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்தனர்.ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக முதலில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின் தான்.மோடியை குறைகூறுவது தவறு. வேளாண் சட்டம் குறித்து தவறான கருத்துகளை ஸ்டாலின் மக்களிடம் பரப்பிவருகிறார்.சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தயாராக உள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE