சென்னை:முதல்வர் பழனிசாமி பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்படும் எனஅறிவித்ததைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்றுமுக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பை சமூக வலைதளங்களில் வரவேற்று ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இது தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரம் குறித்து தி.மு.க. மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் செயலர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை10:00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தை தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கும் ஐ - பேக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரத்தை கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரியாளர்களிடம் தெரிவிக்க உள்ளார்.அதேநேரம் முதல்வர் அறிவிப்பை மிஞ்சும் வகையில் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE