பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சிப்பணி; அதிகாரி ஆய்வு

Added : டிச 20, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சி பணிகளை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி பார்வையிட்டார்.வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய பகுதியில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, சென்னை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், கண்காணிப்பு பொறியாளர் குற்றாலிங்கம், உதவி

வெள்ளகோவில்:வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சி பணிகளை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி பார்வையிட்டார்.வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய பகுதியில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, சென்னை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், கண்காணிப்பு பொறியாளர் குற்றாலிங்கம், உதவி இயக்குனர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சியில் பண்ணைக்குட்டை அமைத்தல், மியாவாகி முறையில் அடர்வனம் அமைத்தல், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் தடுப்பணை, கசிவுநீர் குட்டை அமைத்தல், சிறு சாலைகள் அமைத்தல், தனி நபர் இடத்தில் மண் வரப்பு அமைத்தல், சிறுபாலம் கட்டும் பணி ஆகியவற்றை, அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.ஆய்வின் போது, ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், வெள்ளகோவில் பி.டி.ஓ., பாலமுருகன் உட்பட அரசு அதிகாரிகள், ஊராட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X