பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் மழையால் மண்பாண்ட தொழில் பாதிப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் வேலை இல்லாமல் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் மழை காலங்களில் நிவாரண தொகையாக ரூ.5

மானாமதுரை : மானாமதுரையில் வேலை இல்லாமல் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் மழை காலங்களில் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது வேலை இல்லாமல்மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்துக்குஉள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

தொழிலாளி ஆண்டவர் கூறுகையில், மழை பெய்து வருவதால் தொழிற்கூடங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வேலை செய்ய முடியவில்லை. வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை தற்போது வழங்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X