மதுரை : ஒக்கூர் புதுாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மகள் பூவிகாஸ்ரீ 8. அவ்வூரில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சித்தப்பா ராஜராஜ சோழனுடன் டூவீலரில் மதுரை திருவேடகத்தில் உள்ள அம்மாச்சி வீட்டிற்கு புறப்பட்டார். காலை 11:30 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் ஏ.வி. பாலத்திற்கு பனகல் ரோட்டில் இருந்து திரும்பும்போது பின்தொடர்ந்து வந்த சிலிண்டர் லாரி மோதியது. ராஜராஜசோழன் ஹெல்மெட் அணிந்திருந்தார்.நிலைத்தடுமாறி விழுந்த பூவிகாஸ்ரீ தலையில் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலியானார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., கண்ணன் விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE