பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் இயக்க கலெக்டர் உத்தரவு

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்புத்துார், : திருப்புத்துார் புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து பஸ்கள் வந்து செல்ல கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் ரூ 3.3 கோடி செலவில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதுவரை திறக்கப்படவில்லை. இலவச கழிப்பறை, பயணிகள் காத்திருக்க போதிய நிழற்கூடம் வசதி கோரப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட் கடைகள் வாடகைக்கு விட டெண்டர் இதுவரை நடைபெறவில்லை.

திருப்புத்துார், : திருப்புத்துார் புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து பஸ்கள் வந்து செல்ல கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.

திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் ரூ 3.3 கோடி செலவில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதுவரை திறக்கப்படவில்லை. இலவச கழிப்பறை, பயணிகள் காத்திருக்க போதிய நிழற்கூடம் வசதி கோரப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட் கடைகள் வாடகைக்கு விட டெண்டர் இதுவரை நடைபெறவில்லை. பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று திருப்புத்துார் பேரூராட்சியில் ஆய்வுக்கு நேற்று கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வருகை தந்தார்.அவர் பஸ் ஸ்டாண்ட் பணிகளை பார்வையிட்டு இரண்டு நாட்களில் பஸ்கள் பஸ்ஸ்டாண்டில் இயங்க உத்தரவிட்டார்.

பேரூராட்சி அலுவலகம்வந்த கலெக்டரிடம் காளையப்பா நகரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட குடியிருப்புவாசிகள் வாரச்சந்தையால்சுகாதாரம் பாதிக்கப்படுவது, ரோடு வசதி இல்லாமல் அவதிப்படுவது குறித்து முறையிட்டனர்.வாரச்சந்தை மேம்பாட்டின் போது காளையப்பா நகருக்கான ரோட்டை புதுப்பித்து, சுற்றுச்சுவர் எழுப்பவும் உத்தரவிட்டார். மேலும் மீன் மார்க்கெட்டை வெளியே மாற்றவும் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X