புதுடில்லி:கடந்த ஒன்பது மாதங்களில் ரயில்வே ஊழியர்கள் 700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
டில்லியில் இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் செய்தியாளர் களிடம் பேசியதாவது:கடந்த ஒன்பது மாதங்களில் ரயில்வேயில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறப்பு ரயில் போக்குவரத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வர இயக்கிய ரயில்கள் ஆகியவை சார்ந்த பணியில் ஈடுபட்டவர்கள் தான் அதிக அளவில் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுலபமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள ரயில்வே நடைமேடைகளில் பணியாற்றியவர்கள்.
அவர்கள் பொதுமக்களின் சேவையில் உயிர் தியாகம் செய்தவர்கள்.கொரோனாவால் பாதிக்கப் படும் ரயில்வே ஊழியர்களுக்காக துவக்கத்தில் 50 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டன. இது தற்போது 74 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE