மும்பை:மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ. பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக நேற்று ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிபதிஅதிருப்தி தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலத் தின் வடக்கே மாலேகான் நகரின் மசூதி அருகே 2008 செப். 29ல் வெடிகுண்டுகளுடன் வந்த 'பைக்' வெடித்துச் சிதறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.குண்டுவெடிப்பிற்குகாரணமானவர்கள் என மத்திய பிரதேச மாநிலம்போபால் தொகுதி யின் பா.ஜ., பெண்எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், சுதாகர் திவிவேதி- மற்றும் சுதாகர் சதுர்வேதி உட்பட ஏழு பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கடந்த 3ம் தேதி வழக்கு விசாரணையில் பிரக்யா உட்பட பலர் ஆஜராகவில்லை. நேற்றைய விசாரணையிலும் பிரக்யா, சுதாகர், சதுர்வேதி ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி பி.ஆர்.சித்ரேஅதிருப்தி தெரிவித்தார்.
பிரக்யா தரப்பு வழக்கறிஞர் ஜே.பி.மிஸ்ரா ''உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பிரக்யா டில்லியில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஜன. 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE