இருவருக்கு கத்திக்குத்து3 பேர் கைதுகாளையார்கோவில்: காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த அருண்குமார் என்பவரை 2020 ஆக.,8 ம் தேதி கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் விட்டனேரியை சேர்ந்த சம்பத் மகன் ரமேஷ் 29, என்பவர் மீது வழக்கு பதிந்தனர். இந்த முன்பகை காரணமாக நேற்று மதியம் 1:00 மணிக்கு அழகாபுரிக்கு வந்த அருண்குமாரின் நண்பர்கள் செவல்புஞ்சை சம்ஜோஹர்சன் 19, காளையார்கோவில் முத்துக்கூரி மகன் கோகுல கண்ணன் 19, இருவரையும், விட்டனேரி ரமேஷ் 29, ரஞ்சித் 25, வினோத் 25, ஜான்சன் ஆகிய 4 பேரும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமுற்ற சம்ஜோஹர்சன், கோகுலகண்ணன் இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சீராளன், எஸ்.ஐ., பாண்டி ஆகியோர் ரமேஷ், ரஞ்சித், வினோத்தை கைது செய்தனர்.மணல் திருடிய4 லாரி பறிமுதல்திருப்புத்துார்: நாச்சியார்புரம் அருகே மானகிரி ரோட்டில் அனுமதிசீட்டு இன்றி லாரியில் எம்.சாண்ட் மணல் கடத்துவதாக, போலீசில் சுக்கானேந்தல் வி.ஏ.ஓ., ஜெகஜோதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மானகிரி ரோட்டில் ரோந்து சென்ற போது, 4 லாரிகளில் அனுமதி சீட்டு இல்லாமல் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்ததாக, சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி வீரமணி 35, தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி மாயாண்டி 45, அம்மச்சியாபுரம் தேவகுமார் 28, புதுக்கோட்டை கருப்பையா 48 ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்கள் எடுத்து வந்த 4 லாரியை பறிமுதல் செய்தனர்.வாலிபருக்கு வெட்டுசிவகங்கை: சிவகங்கை அருகே மானாகுடி தர்மராஜ் மகன் சுரேஷ் 26. இவர் நேற்று மதியம் 1:15 மணிக்கு டூவீலரில் சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் சென்றார். அங்கு கார் மற்றும் டூவீலரில் வீச்சரிவாளுடன் வந்த 5 பேர், ரோஸ்நகர் மாரியம்மன் கோயில் எதிரே வழிமறித்து வெட்டி விட்டு தப்பினர். தலை, முதுகு உட்பட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயமடைந்த சுரேசை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., சங்கர் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE