உலகம் முழுவதும், மாற்று எரிசக்தி ஆற்றலுக்கான முக்கியத்துவம் பெருகி வருகிறது. அதிலும், பசுமை எரிசக்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம். அவ்வகையில், ஒரு புதுமையான ஒரு கண்டுபிடிப்பாக, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் பயோ டீசல், என்ற எரிபொருளை குறிப்பிடலாம்.
'பயோடி எனர்ஜி இந்தியா' என்னும் 'ஸ்டார்ட் அப் கம்பெனி' இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கிறது. இந்த கம்பெனியினால் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு 10 லி., உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை மட்டும் தான் சேகரிக்க முடிந்தது.
ஆனால், இன்று டில்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர், உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை 'பயோ டீசலாக' மாற்றி வருகின்றனர்.அவ்வகையில், தற்போது தினமும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பயோடீசல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முறையில், துணை பொருளாக 'கிளிசரினும்' கிடைக்கிறது. தவிர இன்னும் சில துணை பொருட்களும் கிடைக்கின்றன. இதன் வாயிலாக, மாதம், 10 கோடி ரூபாய் வரை வருமானத்தை இந்த கம்பெனி ஈட்டுகிறது. வெளிநாடுகளில் கம்பெனி விரிவாக்கம் என்ற முயற்சியில் தற்போது துபாயில் ஒரு தொழிற்சாலை நிறுவி கொண்டுள்ளனர்.
உற்பத்தி செய்யப்படும், பயோ டீசல் சிமென்ட் மற்றும் மைனிங் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு அவர்களின் தேவைகளுக்கு வினியோகிக்கின்றனர். இது தவிர, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற கம்பெனிகளுக்கும் வினியோகிக்கின்றனர்.
தற்போது நாம், நமது பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்கு இறக்குமதியையே பெரும்பாலும் நம்பியிருக்கிறோம். இதுபோன்ற மாற்று எரிபொருள் உற்பத்தி அதிகமாகும்போது, ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய செலாவணி சேமிப்புக்கு இது உதவும்.இவர்களின் சேவைக்காக, 2020ம் ஆண்டின் 'சிறந்த ஸ்டார்ட் அப்' கம்பெனிகளில் ஒன்றாக தேர்வு செய்ய்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சேதுராமன் சாத்தப்பன் -
இணையதளம்: www.biodenergy.in
சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி எண்: 98204 51259,
இணையதளம்: s tartupandbusiness news.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE