பொது செய்தி

இந்தியா

'புல்லட்' ரயில் படங்கள்: ஜப்பான் துாதரகம் வெளியீடு

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ள இ - 5 ரக 'ஷின்கான்சென்' புல்லட் ரயிலின் படங்களை ஜப்பான் துாதரகம் நேற்று வெளியிட்டது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பை - குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையில் புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை
Bullet Train, புல்லட் ரயில் ஆமதாபாத், மும்பை,  ஜப்பான்தூதரகம்,

புதுடில்லி: மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ள இ - 5 ரக 'ஷின்கான்சென்' புல்லட் ரயிலின் படங்களை ஜப்பான் துாதரகம் நேற்று வெளியிட்டது.


latest tamil news


மஹாராஷ்டிர மாநிலம் மும்பை - குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையில் புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 508 கி.மீ. துாரத்திற்கு பிரத்யேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.


latest tamil news



அந்த பணிகளில் என்.எச்.எஸ்.ஆர்.சி.எல். எனப்படும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை ஜப்பான் அரசு செய்து வருகிறது.மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த புல்லட் ரயில் இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரமாக குறைந்துவிடும்.


latest tamil news



இந்த பிரத்யேக வழித்தடங்களுக்காக ஜப்பான் நாட்டின் இ - 5 ரகத்தை சேர்ந்த ஷின்கான்சென் புல்லட் ரயில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உபயோகிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த புல்லட் ரயிலின் படங்களை ஜப்பான் துாதரகம் நேற்று வெளியிட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
20-டிச-202018:50:56 IST Report Abuse
S. Narayanan Thanks to Indian government for advancing our railways. Fare must be moderate for the public.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
20-டிச-202017:03:43 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இதற்குத்தான் யுத்தம் தாகேரே தடை போட்டுள்ளாரே? பின் எப்படி நிறைவேற்றப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X