துாத்துக்குடி:''தலைவர் என்ற அந்தஸ்துக்கு கமல் இன்னும் வரவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பிறகு அவர் தடம் தெரியாமல் போய் விடுவார்.'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையில் அவர் கூறியதாவது: கமல் தனது கருத்தை தெளிவாக சொல்லட்டும். தமிழகம் சீராக இருந்ததால்தான் கமல் வளர்ச்சி அடைந்து உள்ளார். அனைத்து துறையிலும் தமிழகம் சீரான வளர்ச்சி அடைந்துள்ளது.
கமல் பேச்சால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.புதிய வேளாண் சட்டத்தினால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்பதால் இங்கு விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. தேர்தலுக்காக பொய் பிரசாரத்தால் விவசாயிகளை பகடைக்காய்களாக மாற்ற மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE