பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கொரோனா வார்டில் அலட்சியம்: அகற்றப்படாத மருத்துவ கழிவு

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்;ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக கொரோனா வார்டில், சிதறி கிடக்கும், பயன்படுத்தப்பட்ட முக கவசம், பாதுகாப்பு உடைகள், நோய் தொற்று குறித்த அச்சுறுத்தலை அதிகரிக்க செய்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்த சமயத்தில், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி நீங்கலாக, தாலுகா வாரியாக தற்காலிக மருத்துவமனைகள்
 பள்ளி கொரோனா வார்டில் அலட்சியம்: அகற்றப்படாத மருத்துவ கழிவு

திருப்பூர்;ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக கொரோனா வார்டில், சிதறி கிடக்கும், பயன்படுத்தப்பட்ட முக கவசம், பாதுகாப்பு உடைகள், நோய் தொற்று குறித்த அச்சுறுத்தலை அதிகரிக்க செய்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்த சமயத்தில், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி நீங்கலாக, தாலுகா வாரியாக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி கட்டடத்தில், 32 அறைகளில், 150 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணம் மற்றும் தொற்றுப்பரவலை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெறுவோர் குணமடைந்த பின், சில நாட்கள் இங்கு கண்காணிப்பில் வைக்கப்படுவது வழக்கம். வெளிநபர்கள் நுழையாதபடி, இம்மையத்தை சுற்றி தடுப்பு போடப்பட்டுள்ளன. இருப்பினும், பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள், கையுறை, முக கவசம் போன்ற மருத்துவ கழிவுகள், பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது; இது, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தற்போது, அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இருப்பதால், சில வாரங்களாக இந்த கொரோனா மையத்தில் யாருக்கும் அட்மிஷன் போடப்படவில்லை. இப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட போதும், கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் இவ்வழியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த அலட்சியப்போக்கு குறித்து, மாவட்ட சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X