விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து, பருப்பு வகைகள் விலை குறைந்து விற்பனையாகின.
மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2400, நல்லெண்ணெய் ரூ.3700, சன்பிளவர் எண்ணெய் ரூ.1900, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.1690, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.3800, 100 கிலோ சர்க்கரை ரூ.3560, மைதா 90 கிலோ பை ரூ.3520, 55 கிலோ பொரிகடலை ரூ.30 குறைந்து ரூ.4150, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.200 குறைந்து ரூ.8,500, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.200 குறைந்து ரூ.9,200, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.400 குறைந்து ரூ.7500, உளுந்து லயன் ரூ.200 அதிகரித்து ரூ.7800க்கு விற்கப்படுகிறது.
மசூர் பருப்பு பருவட்டு ரூ.100 அதிகரித்து ரூ.7100, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.11,000, பர்மா வகை ரூ.200 குறைந்து ரூ.9200, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.9400, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.9600, பட்டாணி பருப்பு ரூ.100 குறைந்து ரூ.8000, வெள்ளை பட்டாணி ரூ.100 குறைந்து ரூ.8200, குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.14,000 முதல் 14,500க்கு விற்பனையாகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE