வெள்ளகோவில்:வெள்ளகோவில், தண்ணீர் பந்தல் பகுதியில் ராபி பருவ, பயிர் சாகுபடி குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான ராபி பருவ பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. வெள்ளகோவில், வேளாண் உதவி இயக்குனர் பொன்னுசாமி, வேளாண் அலுவலர் செல்வகுமார், திட்ட தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டுப்பண்ணைய திட்டம், பண்ணைகுட்டை அமைத்தல், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் மானிய விவரங்கள், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது. நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலர் சந்தியா, மண் பரிசோதனையின் அவசியம், மண் வளம் அறிந்து உரமிடுதல் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து பேசினார்.குறைந்த தண்ணீர் தேவையுள்ள ஊட்டச்சத்து மிக்க தானியங்களை சோளம், கம்பு, ராகி, சாகுபடி மேற்கொள்ளவும் அவற்றில் உள்ள மாவு, புரத சத்து, வைட்டமின், தாது உப்பு மற்றும் நார் சத்துக்களின் நன்மை குறித்து விளக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE