திருப்பூர்;முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, ரேஷன் கடையில் மாற்று நபர் மூலம் பொருள் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்டுதாரர் விவரங்கள் இணைக்கப்பட்ட பிறகு, பொதுவினியோக திட்டம் நவீனமாகியுள்ளது. தற்போது, 'பயோமெட்ரிக்' எனும், கைரேகை பதிவு செய்து பொருட்கள் பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. குடும்பத்தை சாராத வேறு யாரும், மற்றவர் கார்டை பயன்படுத்தி, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.ஆதரவற்ற முதியோர், முதியோர் மட்டும் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த கார்டுதாரர்களுக்கு, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடக்க முடியாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 'நாமினி' நியமிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறியதாவது:நடமாட முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் மட்டும், இவ்வசதியை பயன்படுத்தலாம். www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று, கீழே உள்ள, 'அங்கீகாரச்சான்று' என்ற பகுதியை, 'கிளிக்' செய்து, அதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரம், பொருள் பெறமுடியாதற்கான காரணம், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண், அத்தியாவசிய பொருட்கள் பெற நியமிக்கப்படும் நபரின் பெயர் மற்றும் அவரது ரேஷன் கார்டு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து, அங்கீகாரச்சான்று பெற்றுக்கொள்ளலாம். அதை பயன்படுத்தி, நியமனம் செய்யப்பட்ட நபர் மூலம், ரேஷன் பொருள் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE