புதுடில்லி:மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ள, இ - 5 ரக, 'ஷின்கான்சென்' புல்லட் ரயிலின் படங்களை, ஜப்பான் துாதரகம், வெளியிட்டது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை - குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையில், புல்லட் ரயில் எனப்படும், அதிவேக ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை, 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக, இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள, 508 கி.மீ., துாரத்திற்கு, பிரத்யேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.அந்த பணிகளில், என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை, ஜப்பான் அரசு செய்து வருகிறது.மணிக்கு, 350 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்த புல்லட் ரயில், இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை, வெறும், இரண்டு மணி நேரமாக குறைந்துவிடும்.
இந்த பிரத்யேக வழித்தடங்களுக்காக, ஜப்பான் நாட்டின் இ - 5 ரகத்தை சேர்ந்த, ஷின்கான்சென் புல்லட் ரயில், மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உபயோகிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த புல்லட் ரயிலின் படங்களை, ஜப்பான் துாதரகம், நேற்று வெளியிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE