திருப்பூர்:'நாள்பட்ட மற்றும் பிற மருத்துவத்தில் குணமாகாத நோய்களை சித்த மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும்,' என திருஞானந்தா சுவாமி தெரிவித்தார்.பசித்தோர்க்கு உணவு வழங்கும் அறச்செயலாகிய பசிப்பிணி நீக்குதலும், கொல்லா நெறியும் ஜீவகாருண்யம் என்ற இரு நெறிகளே உண்மையான இறைவழிபாடு என வலியுறுத்தி சொன்னவர் வள்ளலார். அவரின் வழித்தோன்றலாக போற்றப்படுபவர் திருச்செந்துாரை சேர்ந்த இமயஜோதி திருஞானந்தா சுவாமிகள்.திருப்பூர், பி.என்., ரோடு, நெசவாளர் காலனியிலுள்ள வள்ளலார் 'டயா வூண்டு க்யூர்' மருத்துவமனைக்கு நேற்று வந்த அவர் கூறியதாவது:எண்ணம், சொல், செயல் ஆகியவைதான் நன்மை, தீமைக்கு அடிப்படையான காரணங்கள் என்றாலும் எண்ணமே சொல்லுக்கும் செயலுக்கும் முன்னோடி. இந்த முன்னோடியான எண்ணத்தை அது தோன்றும் நிலையிலேயே துாய்மையானதாகவும், நல்லதாகவும் அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சொல்லும், செயலும் நல்லதாக அமையும்.அவ்வகையில், வள்ளலாரின் வாழ்வியல் நெறிகளை மக்களிடையே பரப்ப ஞானாலயா வள்ளலார் கோட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தினமும் நடமாடும் தருமச்சாலை எனும் பெயரில் அன்னதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் வாயிலாக, ஆதரவற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், இயங்க முடியாதவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடம் தேடி, உணவு அளிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின்போது, 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம் அளிக்கப்பட்டுள்ளது.நாள்பட்ட மற்றும் பிற மருத்துவத்தில் குணமாகாத நோய்களுக்கு, சித்த மருத்துவத்தின் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில், 'வள்ளலார் டயா வூண்ட் கியூர்' மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தெய்வீக மணம் கமழும் திவ்யத் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில், மிக உன்னதானமானது இமயமலை. அங்கு, 30 கோடி ரூபாய் மதிப்பில், அருட்பெருஞ்ஜோதி ஞானப் பெருங்கோவில் கட்டுமானம் நடக்கிறது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், பிரதமர் மோடி கோவிலை திறந்து வைக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE