வளம் ரோட்டில் 'நலம்' இல்லை: வாகன ஓட்டிக்கு பல தொல்லை

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், நொய்யல் ஆற்றின் அருகேயுள்ள, வளம் ரோட்டில், குப்பை கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.திருப்பூர் நகரின் மையத்தில் செல்லும் நொய்யல் ஆற்றின் தெற்கு பகுதி கரையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட தார் ரோடு உள்ளது. ஆற்றின் வடக்கு கரையில், ரோட்டரி மின் மயானம், மாநகராட்சி மயானம் உள்ளன. இரு
 வளம் ரோட்டில் 'நலம்' இல்லை: வாகன ஓட்டிக்கு பல தொல்லை

திருப்பூர்:திருப்பூர், நொய்யல் ஆற்றின் அருகேயுள்ள, வளம் ரோட்டில், குப்பை கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.திருப்பூர் நகரின் மையத்தில் செல்லும் நொய்யல் ஆற்றின் தெற்கு பகுதி கரையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட தார் ரோடு உள்ளது. ஆற்றின் வடக்கு கரையில், ரோட்டரி மின் மயானம், மாநகராட்சி மயானம் உள்ளன. இரு கரைகளையும் இணைக்கும் வகையில் 'வளம்' அமைப்பினர் கட்டிய பாலம் உள்ளது.வடக்கு கரையில் உள்ள வளம் பாலம் ரோடு, அணைக்காடு செல்லும் வழியில், ரோட்டோரம் குப்பை கழிவு பெருமளவு கொட்டப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு, கடை மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை, பேட்டரி வாகனங்களில் அள்ளி கொண்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள், ரோட்டோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ரோட்டில் கொட்டப்படும் குப்பை கழிவு, நொய்யல் கரையையும் ஆக்கிரமித்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில், 'குவித்து வைக்கப்படும் குப்பை, உடனுக்குடன் லாரிகள் மூலம் அகற்றப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X