பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்த பாலிதின் பயன்பாடு: கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Added : டிச 20, 2020
Share
Advertisement
பல்லடம்:பாலிதின் தடுப்பு நடவடிக்கையில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து நிலையில், பாலிதின் தடுப்பு நடவடிக்கையில், பல்லடம் நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. சில தினங்களாக, தொடர் சோதனை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள், பெருமளவில், தடை செய்யப்பட்ட பாலிதின் பொருட்களை பறிமுதல் செய்ததுடன்,
 அதிகரித்த பாலிதின் பயன்பாடு: கட்டுப்படுத்த வலியுறுத்தல்

பல்லடம்:பாலிதின் தடுப்பு நடவடிக்கையில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து நிலையில், பாலிதின் தடுப்பு நடவடிக்கையில், பல்லடம் நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. சில தினங்களாக, தொடர் சோதனை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள், பெருமளவில், தடை செய்யப்பட்ட பாலிதின் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அபராதம் விதித்தனர். 'நெகிழி இல்லா பல்லடம்' உருவாக்க வேண்டும் என்பதில், பல்லடம் நகராட்சி ஆர்வமாக உள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது;வணிகர்கள், சிறு வியாபாரிகள், மளிகை, பேக்கரி, ஹோட்டல், பழக்கடை, இறைச்சி, மீன் கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தாராளமாக பாலிதின் பை பயன்படுத்தப்படுகிறது.அரசு உத்தரவை பின்பற்றி, பொதுமக்கள் துணி பைக்கு மாறி வந்த சூழலில், ஊரடங்கை சாதகமாக்கி, மீண்டும் பாலிதின் பயன்பாடு புகுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கும். நகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி தொடர் சோதனை மேற்கொண்டு, மொத்த வியாபாரிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X