சென்னை:மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், 98வது பிறந்த நாளை ஒட்டி, அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது படத்திற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகளும், மரியாதை செலுத்தினர். சென்னை, அயனாவரத்தில் உள்ள, டபிள்யூ.பி.சவுந்தரராஜன் மேல்நிலைப் பள்ளியில், அன்பழகன் பிறந்த நாளை ஒட்டி, 100 கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களை, ஸ்டாலின் வழங்கினார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள், சென்னை, அயனாவரத்தில் உள்ள, அன்பழகன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE