திருப்பூர்:அரசு மருத்துவ கல்லுாரியில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் எடுத்துச் செல்லப்படுவதை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் அறிக்கை:மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உடன் தங்குபவர்கள் மற்றும் உறவினர்கள், உணவு மற்றும் பழங்களை, பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, மருத்துவமனை பிரதான கட்டடங்களின் நுழைவு வாயிலில், அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல், டாக்டர், நர்ஸ்கள் பாலிதின் பயன்படுத்த கூடாது.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE