சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலுகா ஆபீஸ் முற்றுகை

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:விருதுநகரிலிருந்து, திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் வரை, உயர்மின்னழுத்த பாதைக்கு மின் டவர் அமைக்கப்படவுள்ளது. இதில், காங்கயம் அடுத்த படியூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.இதற்காக நிலம் அளவீடு செய்ய மின்வாரியத்தினர் சென்றனர். இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் திரும்பினர்.அதன்பின்

திருப்பூர்:விருதுநகரிலிருந்து, திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் வரை, உயர்மின்னழுத்த பாதைக்கு மின் டவர் அமைக்கப்படவுள்ளது. இதில், காங்கயம் அடுத்த படியூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.இதற்காக நிலம் அளவீடு செய்ய மின்வாரியத்தினர் சென்றனர். இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் திரும்பினர்.அதன்பின் விவசாயிகள், காங்கயம் தாலுகா அலுவலகம் சென்று, தாசில்தாரை சந்தித்து முறையிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய தாசில்தார் சிவகாமி மற்றும் மின்வாரிய அலுவலர்கள், 'இப்பணி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளித்து, உரிய அனுமதி பெற்ற பின்பே பணி தொடரும்' என, உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X