பொங்கலூர்:பொங்கலுார் வட்டாரத்தில், முருங்கையில், கவாத்து பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.முருங்கை மரங்கள் கார்த்திகை, மார்கழி மாதத்தில் பூக்க ஆரம்பித்து, மாசி, பங்குனி மாதங்களில் ஒட்டுமொத்தமாக காய்ப்புக்கு வந்துவிடும். இதனால், விளைச்சல் அதிகரித்து விலை சரிவு ஏற்படுவது வாடிக்கை.மழைக்காலமான புரட்டாசி முதல் மார்கழி வரை விவசாயிகள் கவாத்து பணியில் கவனம் செலுத்துகின்றனர். முருங்கை மரத்தை கவாத்து செய்வதால் சூரிய ஒளி நன்கு படுகிறது. இதனால், பூச்சி தாக்குதல் குறைவதுடன் நோய்களும் குறைகிறது.கவாத்து செய்யப்படும் முருங்கை பருவமழையைப் பயன்படுத்தி நன்கு துளிர் விட்டு வளரும். கவாத்து செய்வதால் தரமான காய்களும் கிடைக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE