குன்னுார்:குன்னுார் அருகே, ஐ.டி., ஊழியர் ஒருவர், இயற்கையான முறையில் நாட்டு கோழி பண்ணை வைத்து அசத்தி வருகிறார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் கிளிஞ்சாடா கிராமத்தை சேர்ந்தவர் முரளி தரன்,44. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், இயற்கை சார்ந்த முறையில் கோழி வளர்ப்புக்கு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுள்ளார். வீட்டு தோட்டங்களில் வளர்க்கும் கீரை வகைகள், காய்கறிகள், மூலிகைகள், அசோலா மற்றும் மஞ்சள், வசம்பு, பூண்டு, சிறிய வெங்காயம், கம்பு, சோளம் தீவனமாக வழங்கப்படுகிறது. குளிரான காலநிலையிலும் நாட்டு கோழிகளை வளர்த்து வருவது ஆச்சரியமடைய வைத்துள்ளது.முரளிதரன் கூறுகையில், ''கோழிகளுக்கு இயற்கை உணவை தீவனமாக வழங்குவதால், இறைச்சி மக்கள் உடலுக்கு பாதிப்பை தராது. கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்துள்ள நிலையில், மனம் தளராமல், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, இதுபோன்ற பண்ணைகளை துவக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE