திண்டுக்கல் : 'ஆசிரியர் நேரடி நியமன வயது வரம்பில் திருத்தம் செய்துள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தலைவர் தங்கராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுப்பிரமணி, மாநில இணைச் செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ராஜகுரு வரவேற்றார். பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், பொருளாளர் குமரசேன் உட்பட பலர் பேசினர்.ஆசிரியர் நேரடி நியமன வயது வரம்பு 40 --45 ஆக திருத்தம் செய்துள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2004 - 06 ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதிய பணிக்காலத்தை காலமுறை பணிக்காலமாக கணக்கில் கொண்டு, பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலைக்கு அனுமதிக்க வேண்டும். ஜாக்டோ - -ஜியோ போரட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE