சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானையை கண்காணிக்க பாட்டில் 'டெக்னிக்'

Added : டிச 20, 2020
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் வயல்களில் இரவில் காட்டு யானைகள் நுழைவதை அறிய, விவசாயிகள் கம்பி வேலியில், கண்ணாடி பாட்டில்களை கட்டி கண்காணித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரின் சில பகுதிகளில் காட்டு யானைகள் வயல்களில் நுழைந்து, நெற் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவை நள்ளிரவில் சப்தமின்றி வந்து செல்வதால் விரட்ட முடியவில்லை. இதனால், சில விவசாயிகள் வயலைச் சுற்றி கம்பி

கூடலுார்:கூடலுார் வயல்களில் இரவில் காட்டு யானைகள் நுழைவதை அறிய, விவசாயிகள் கம்பி வேலியில், கண்ணாடி பாட்டில்களை கட்டி கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுாரின் சில பகுதிகளில் காட்டு யானைகள் வயல்களில் நுழைந்து, நெற் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவை நள்ளிரவில் சப்தமின்றி வந்து செல்வதால் விரட்ட முடியவில்லை. இதனால், சில விவசாயிகள் வயலைச் சுற்றி கம்பி கட்டி, அதில் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டுக்கு மேற்பட்ட காலி கண்ணாடி பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில்,'நள்ளிரவில் வயலுக்குள் நுழையும் காட்டு யானைகள், கம்பி வேலியை கடக்க முயலும்போது, அதில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களால் சப்தம் எழும். அப்போது, அவற்றை விரட்டி, நெற்பயிர்களை பாதுகாக்க முயன்று வருகிறோம். இப்பகுதிகளில் விளைபயிர்கள் சேதம் அடையாமல் இருக்க, வனத்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X