பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்கும் விவசாயிகளுக்கு விருது: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
சென்னை:சாகுபடியில் சாதித்து காட்டும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்குவதற்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், அதில், விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.சிறந்த முறையில் தொழில்நுட்ப

சென்னை:சாகுபடியில் சாதித்து காட்டும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்குவதற்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், அதில், விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில், தலா, 10 சாதனையாளர்களுக்கு விருது வழங்க உள்ளது.

என்னென்ன விருதுகள்?

* காய்கறிகள், பழங்கள், சுவைதாளி பயிர்கள், மூலிகை அல்லது வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர்கள் சாகுபடி சாதனையாளர் விருதுகள்

* நுண்ணீர்பாசன தொழில் நுட்பத்திற்கான சாதனையாளர் விருது, உயர் தொழில்நுட்ப சாகுபடியில் சாதனையாளர் விருது, இயற்கை விவசாயத்திற்கான சாதனையாளர் விருது

* புதிய அல்லது தனித்துவம் மிக்க மற்றும் மாவட்டத்திற்கு உரிய தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான சாதனையாளர் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.தமிழகத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும், இதில் போட்டியிடலாம்.

ஒரு விவசாயி வட்டார அளவில், ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகள், மாவட்ட, மாநில விருதுகளுக்கு, குழுவால் தேர்வு செய்யப்படுவர். விருது பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை துறையின், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய ஆவணங் களுடன் சமர்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் தொழில்நுட்ப சாதனைகளை விவசாயிகள் வெளிக்கொண்டு வந்து, பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X