சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியர்கள் திடீர் போராட்டம்

Added : டிச 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'போராட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசின், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை, தனியாருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, புதுச்சேரி மாநிலத்தில், மின் வாரிய ஊழியர்கள், இம்மாதம், 4ம் தேதி முதல்,

சென்னை:'போராட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை, தனியாருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, புதுச்சேரி மாநிலத்தில், மின் வாரிய ஊழியர்கள், இம்மாதம், 4ம் தேதி முதல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ஊழியர்களுடன் பேச்சு நடத்த கோரியும், போராட்டத்தை கைவிடா விட்டால், 'எஸ்மா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரியும், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'நிவர் புயலால், புதுச்சேரியில், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. கம்பிகள் அறுந்து உள்ளன; அவை சரிசெய்யப்படவில்லை. ஊழியர்களின் போராட்டத்தினால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

பெறப்பட்டுள்ளது; சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவுக்கு பதில் அளிக்கும் படி, புதுச்சேரி அரசின் மின் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, பிப்., 16ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X