பொது செய்தி

தமிழ்நாடு

'இ - ஆபீஸ்' முறை: மின் வாரியத்தில் தீவிரம்

Added : டிச 20, 2020
Share
Advertisement
சென்னை:மின் வாரியத்தில், 'இ - ஆபீஸ்' எனப்படும், கணினி வாயிலாக, இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட கோப்புகள் கையாளப்பட்டுள்ளன.தமிழக மின் வாரியத்தில், மின் உபகரணம், நிலக்கரி என, பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஆண்டுதோறும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு, காகித கோப்புகள் வாயிலாக, அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை

சென்னை:மின் வாரியத்தில், 'இ - ஆபீஸ்' எனப்படும், கணினி வாயிலாக, இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட கோப்புகள் கையாளப்பட்டுள்ளன.

தமிழக மின் வாரியத்தில், மின் உபகரணம், நிலக்கரி என, பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஆண்டுதோறும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு, காகித கோப்புகள் வாயிலாக, அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை இருந்தது. இதனால், கோப்பில் உள்ள விபரத்தை கசிய விடுவது, ஒளித்து வைப்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தன.

இதையடுத்து, காகித கோப்புக்கு மாற்றாக, 'இ-ஆபீஸ்' எனப்படும், கணினி வாயிலாக கோப்புகளை கையாளும் முறை, தலைமை அலுவலகத்தில், ஜூலையில் செயல்படுத்தப் பட்டது. வாரிய தலைவர், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பும் கோப்புகள், கணினி வாயிலாக அனுப்பப்படுகின்றன.அந்த முறையில், இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட கோப்புகள் கையாளப்பட்டுள்ளன. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கணினியில் கோப்புகளை, எங்கிருந்தபடியும் கையாள முடிகிறது. நேரம் உட்பட, அனைத்து விபரமும் கணினியில் பதிவாவதால், விரைந்து ஒப்புதல் தரப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X