குன்னுார்:குன்னுாரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வண்ணமயமான கேக் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்படுகிறது. பேக்கரிகளிலும், வீடுகளிலும் கேக் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.தற்போது, கொரோனா பதிப்பு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் கேக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயில், இயற்கை காட்சிகள், ரோஜா, போன்ற வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் கேக் தயாரிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளை கவரும் வகையில், மிக்கி மவுஸ் உள்ளிட்ட பொம்மை கேக்குகள், பிளாக் பாரஸ்ட், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. குன்னுார், வெலிங்டன், ராணுவ பகுதி, சிம்ஸ்பூங்கா உட்பட சில பகுதிகளில், இவற்றை வாங்க மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.பாலக்காட்டிலும்கேக் 'ரெடி'பாலக்காட்டிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. 'ஹோம் மேடு' முதல், மாநில அரசின் 'குடும்பஸ்ரீ' அமைப்பினர் தயார் செய்த கேக்குகள் வரை, விற்பனைக்கு தயாராகி வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு 'சுகர்ப்ரீ' கேக்குகளும் உள்ளன. பிளம் கேக் கிலோ 140 ரூபாய் முதல் கிடைக்கின்றன. கிரீம் கேக் ரூபாய் 300 முதல் கிடைக்கின்றன. ஐஸ்கிரீம் கேக்குகளுக்கும் மவுசு அதிகம்.கேக் விற்பனையாளர் நிசார் கூறுகையில், ''பிளம் கேக் இரண்டு வாரத்துக்கு மேல் கெடாமல் இருக்கும். ப்ருட் கேக்குகள் 10 நாள், பிரஷ் கிரீம் கேக் மூன்று நாள் வரை நன்றாக இருக்கும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், கேக் விற்பனை, வரும் நாட்களில் சூடுபிடிக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE